Send your Enquiry to msmsoftltd@gmail.com

தயாரிப்பு பொருட்கள்

நாங்கள் 300gm எடை கொண்ட சிப்பி மற்றும் பால் காளான் விதைகள் பைகள் விற்பனை செய்கின்றோம்.
உங்கள் சமையலறையின் அங்கமாக இயற்கை காளான்கள் இடம்பெறும் பொருட்டு எங்கள் சேவையின் ஒரு பகுதியாக தனிப்பட்ட பயிற்சி மற்றும் காளான் வளர்ப்பு இடங்களில் விஜயம் செய்து பயிற்சியும் அளிக்கிறோம். மேலும், காளான் வளர்ப்புக்கு தேவையான அனைத்து மூல பொருட்களும் எங்களிடம் கிடைக்கின்றன.

காளானின் நன்மைகள்:

காளானின் நன்மைகள்: தினமும் உட்கொள்வதின் மூலம் நம் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்க செய்யும் 1 அருமையான காய்கறி வகையே காளானாகும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியை விட காளான் வளர்ப்பு மிகவும் எளிதான, குறைந்த செலவில், சுற்று சூழலுக்கு மாசு ஏற்படாமல் செய்ய கூடியதாகும். பல்வேறு மறுசுழற்சி செய்யப்பட்ட இயற்கை பொருட்களை வைத்து காளான் வளர்ப்பு சாத்தியமாகும். மேலும், காளான் சாகுபடியில் இருந்து வரும் கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்து கால்நடை உணவாக பயன்படுத்தி பால் உற்பத்தியை அதிகபடுத்தலாம்.

பண்டைய காலம் தொட்டே காளான் நம் உணவின் ஒரு முக்கிய பகுதியாக விளங்கி வருகிறது. அவை மாறுபட்ட வண்ணங்களிலும்,வடிவங்களிலும், சுவைகளிலும் கிடைக்கின்றன. மேலும், இவை ஒரு சுத்த சைவ உணவாகும்.

காளான் மற்ற காய்கறி, பழங்கள், இறைச்சி பொருட்கள் ஒப்பிடும்போது அதிக புரதம், குறைந்த கொழுப்பு சத்து உள்ள உணவு ஆகும். அதில் உள்ள அதிகப்படியான உயிர்ச்சத்துகள், தாது உப்புகள், சோடியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் நார் சத்துகளின் காரணமாக சர்க்கரை வியாதி, இருதய நோய்கள், அதிக கொழுப்பு, நரம்பு தளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ள மக்களுக்கு இது மிகவும் ஏற்ற உணவாகும். எங்கள் காளான் பொருட்கள் மற்றும் விதைகள் எங்கள் மிகவும் திறமையான தொழில் மூலம் தொழில் தரத்தில் உயர் தர பொருள் இருந்து உருவாக்கப்பட்டன.

1)  Lectin என்னும் வேதியல் பொருள் இருப்பதால் இரத்தத்தில் சிவப்பணுக்களை விருத்தி செய்கிறது.
2) இரத்தம் உறையாமல் தடுத்து இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது.
3) இரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கிறது.
4) இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது.
5) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
6) உடம்பில் வலி, வீக்கம் வராமல் தடுக்கிறது.
7) இரத்தத்தில் உள்ள விஷத்தன்மையை கட்டுப்படுத்தி கேன்சர் மற்றும் அல்சர் வளர்ச்சியை தடுக்கிறது .
8) வலி நிவாரணியாக பயன்படுகிறது.
9) நரம்பு தளர்ச்சி, பக்கவாதம் போன்ற நரம்பியல் நோய்களை தடுக்க உதவுகிறது.
10) மூளையின், நினைவாற்றல் போன்ற இயக்கங்களை ஒழுங்குபடுத்துகிறது.
11) தசை நார்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது.
12​) முதிர்ச்சி தன்மையை குறைக்கிறது.
13) மரபணுக்களின் தன்மையை காத்து பாரம்பரிய நோய்களை தடுக்கிறது.